சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது.
கண்காணிப்பு பலூன் இருப்பது பொறுப்பற்ற செயல் என்று கூறி, அமெரிக்க இராஜாங்க செயலர் ஆண்டனி பிளிங்கன் பெய்ஜிங்கிற்கான பயணத்தை நிறுத்தினார். அத்துடன் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
‘எந்தவொரு இறையாண்மை, நாட்டின் எல்லையையும் வான்வெளியையும் ஒருபோதும் மீறவில்லை. அனைத்து மட்டங்களிலும் தகவல் தொடர்பு சேனல்களைப் பராமரிப்பது முக்கியம். சில எதிர்பாராத சூழ்நிலைகளை அமைதியான மற்றும் நம்பகமான முறையில் கையாள வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள சில அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் சீனாவைத் தாக்குவதற்கும் அவதூறு செய்வதற்கும் இந்தச் சம்பவத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொண்டன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தைப் பற்றி பிளிங்கனுடன் விவாதித்ததாகவும் கூறியது,