தேசிய சுகாதார சேவையின் மிகப்பெரிய வெளிநடப்பு சுற்றில், செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இங்கிலாந்தின் சில பகுதிகளில் வேலைநிறுத்தம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகளில் மூன்றில் ஒரு பகுதியின் ரோயல் காலேஜ் ஆஃப் நர்சிங் உறுப்பினர்கள் இன்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
ஆனால், வேல்ஸுக்குத் திட்டமிடப்பட்ட நடவடிக்கை புதிய ஊதியச் சலுகையைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டது.
இரண்டு ஆம்புலன்ஸ் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் – ஜி.எம்.பி. மற்றும் யுனைட் சில இடங்களில் முதல் முறையாக ஒரே நாளில் இரு துறைகளும் வெளிநடப்பு செய்வதால் அவர்களுடன் இணைவார்கள். எனினும், தொழிற்சங்க சட்டங்களின் கீழ், அவசரகால பாதுகாப்பு வழங்கப்படும்.
இது இந்த வாரம் இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் தொடர்ச்சியான வெளிநடப்புக்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இந்த வாரம் வேல்ஸில் நடைபெறவிருந்த பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்தியதை அடுத்து இது வந்துள்ளது.
பிசியோக்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்ய மாட்டார்கள் என்று வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
சில ஆம்புலன்ஸ் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் யுனைட் மட்டுமே இன்று அதன் திட்டமிட்ட நடவடிக்கைக்கு செல்கிறது.