நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியைக் கொண்டு நடத்தும் திறமை இல்லை என இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதாக தாங்கள் கூறவில்லை எனவும், எதிர்க்கட்சிகள்தான் அப்படி தாங்கள் செய்யப்போவதாகக் கூறித் திரிகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என கூறுபவர்கள் நிச்சயமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என விரும்பாதவர்கள்.
அவர்களால் வெல்ல முடியாது. தோல்விப் பயம் காரணமாகவே அவர்கள் உளறுகின்றார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள்தான் ஆட்சியைக் கைப்பற்றும், ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றும் ஆசையுடன் இருப்பவர்கள்.
முடிந்தால் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 50.1 வீத வாக்குகளை எடுத்துக் காட்டட்டும் என சவால் விடுக்கின்றேன் எனவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.