தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கரையோர சேவை உள்ளிட்ட 10 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொல்கஹவெல – மருதானை, மஹவ – கொழும்பு கோட்டை ஆகிய 2 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனை – கொழும்பு கோட்டை மற்றும் குருநாகல் – கொழும்பு கோட்டை, ஹிக்கடுவ – மருதானை, அளுத்கம ஆகிய பல ரயில்களும் இரத்தாகியுள்ளன.
மருதானை மற்றும் களுத்துறை – மருதானைக்கு இயக்கப்படவிருந்த 3 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன.
மேலும், புத்தளம் மார்க்கத்தில் ஹலவத்தையில் இருந்து கொழும்பு வரை இயக்கப்படவிருந்த இரண்டு புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.