நிதி இல்லை என்பதற்காக அல்ல வாக்குகள் இல்லாததால்தான் தேர்தலை நடத்த அரசாங்கம் தயங்குகின்றது என உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மாமா ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் இந்த வழியை பின்பற்றி இவ்வாறு செய்துவருகின்றார் என்றும் குற்றம் சாட்டினார்.
கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க முடியாமல் போனமை வரவு செலவுத் திட்டத்தை இழப்பதற்கு சமம் எனவும் தெரிவித்தார்.