எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்கொட்லாந்தின் முதலமைச்சராக இருந்த நிக்கோலா ஸ்டர்ஜன், தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சித் தலைவரான நிக்கோலா ஸ்டர்ஜன், பதவி விலக இதுவே சரியான நேரம் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும். புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஸ்டர்ஜன் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் மற்றும் அந்த பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமை நிக்கோலா ஸ்டர்ஜனையே சேரும்.