ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக ரஷ்யா மீது பழியை சுமத்த உக்ரைன் தனது பிராந்தியத்தில் அணுசக்தி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெயரிடப்படாத ஐரோப்பிய நாட்டிலிருந்து கதிரியக்க பொருட்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன, மேலும் உக்ரைன் ஒரு பெரிய அளவிலான ஆத்திரமூட்டலுக்கு தயாராகி வருகின்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள அபாயகரமான கதிரியக்க வசதிகள் மீது ரஷ்யாவின் இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டுவது ஆத்திரமூட்டலின் நோக்கம், இது கதிரியக்க பொருட்கள் கசிவு மற்றும் அப்பகுதியில் மாசுபடுவதற்கு வழிவகுத்தது என்று அது மேலும், கூறியது.
உக்ரைனும் அதன் கூட்டாளிகளும் இத்தகைய குற்றச்சாட்டுகளை தவறான தகவல்களை பரப்புவதற்கான இழிந்த முயற்சிகள் என்று நிராகரித்துள்ளனர், மேலும் உக்ரைனைக் குற்றம் சாட்டும் முயற்சியில் ரஷ்யா தாக்குதல்களைத் திட்டமிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்ய ஏவுகணை அலகுகளைத் தாக்கும் உக்ரைனின் திறனை, விமானம் உயர்த்தும் என்று கூறி, எஃப்-16 போர் விமானங்களை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு உக்ரைனிய அதிகாரிகள் அமெரிக்க அரசியல்வாதிகளை வலியுறுத்தியதால் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா உட்பட உக்ரைனிய அதிகாரிகளுக்கும், அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முனிச் பாதுகாப்பு மாநாட்டின் போது, வார இறுதியில் இந்த பரப்புரை வந்தது.