இந்தியா தனது பாரம்பரியத்தை மகத்தான சுயமரியாதை மற்றும் பெருமிதத்துடன் வெளிப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அத்துடன், நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் அதேவேளையில் அதன் பாரம்பரியங்களை வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் கொள்கைகளை மற்றும் முயற்சிகளில் எந்த பாகுபாடும் இல்லை என்றும், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டதாகவே அவை இருக்கும் என்றும் அவர் கூறினார்.
சமூக சீர்திருத்தவாதியும், ஆர்ய சமாஜ நிறுவனருமான தயானந்த சரஸ்வதியின் 200ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் கொண்டாட்டங்களைத் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் சின்னத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
சுற்றுச்சூழலில் இந்தியா உலகிற்கு வழி காட்டுவதாகவும், இந்த ஆண்டு ஜி20 மாநாட்டில் இந்தியா தலைமை தாங்குவது பெருமைக்குரியது என்றும் அவர் கூறினார்.
மிகப்பெரும் சுயமரியாதையுடன் கூடிய நாடு இன்று அதன் பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொள்கிறது.
நவீனத்துவத்தை கொண்டு வரும்போது நமது பாரம்பரியங்களை வலுப்படுத்துவோம் என்று நாடு முழு தன்னம்பிக்கையுடன் கூறுகிறது’ என்று பிரதமர் மோடி கூறினார்.
நாடு ‘விராசத்(பாரம்பரியம்)’ மற்றும் ‘விகாஸ் (வளர்ச்சி)’ பாதையில் இயங்குகிறது.
கர்தவ்ய பாதையில் நடப்பது பற்றி பேசும் போது, கடமைகளை பற்றி பேசுகிறார் ஆனால் உரிமைகள் பற்றி பேசவில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.
21ஆம் நூற்றாண்டில் எனக்கே இப்படி சாவல்கள் இருந்தால், 150 ஆண்டுகளுக்கு முன்பு – சுவாமி தயானந்தர் சமுதாயத்திற்கு வழிகாட்டுவதில் என்ன வகையான சிரமங்களை எதிர்கொண்டிருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்,’ என்றும் அவர் கூறினார்.
மகரிஷி தயானந்த சரஸ்வதி காட்டிய பாதை கோடிக்கணக்கான மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கது. இது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான உத்வேகத்தை அளிக்கின்றது என்றும் மோடி கூறினார்.
மகரிஷி தயானந்த சரஸ்வதி, இந்தியாவின் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக குரல் கொடுத்தார் மற்றும் சமூக பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராக வலுவான பிரச்சாரத்தை தொடங்கினார். அதன்வழிகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்றார்.