கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி, பிக்குகள் குழுவொன்றினால் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரகம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.
கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுவிக்கப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காத்திருந்த பிக்குகள் குழுவினர், பின்னர் புத்தசாசன அமைச்சுக்கு முன்பாகச் சென்றதுடன், அங்கு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
அதன்பின்னர், குறித்த கலந்துரையாடல் தோல்வியடைந்ததாகக் கூறி, கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விகாரமகாதேவி பூங்காவில் தங்கியிருப்பதாக தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.














