இந்தியாவில் ஜி-20 இல் பெண் பிரதிநிதிகளின் மேம்படுத்தும் கூட்டம் பெப்ரவரி 11 முதல் 12 வரை இரண்டு நாட்களுக்கு ஆக்ராவில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடந்தது.
இக்கூட்டத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது, ஆகியன முக்கிய இடத்தினைப் பிடித்தது.
கலாசாரத்தை சித்தரிக்கும் கண்ணை கவரும் சுவர் ஓவியங்கள், செங்குத்து தோட்டங்கள், வரவேற்பு பலகைகள் மற்றும் கழிவு பொருட்களால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் உள்ளிட்டவற்றால் ஆக்ரா அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதனை ஆர்வம் உடன் பார்வையிட்ட பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் உட்பட நகரத்தில் உள்ள பல வரலாற்று நினைவுச்சின்னங்களை பார்வையிட்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் கவனம் செலுத்தும், பெண்கள் தொழில்முனைவு, சமபங்குமற்றும் பொருளாதாரத்திற்கான வெற்றி, அடிமட்டத்தில் உட்பட அனைத்து மட்டங்களிலும் பெண்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான கூட்டாண்மை, கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் சமமான பணியாளர் பங்கேற்புக்கான திறவுகோல் ஆகியன பற்றி தெளிவுபடுத்தினார்.
ஜி-20 ஷெர்பா அமிதாப் காந்த் கூறுகையில், மந்தநிலையுடன், உலகம் பருவநிலை மாற்றம் உட்பட பல சவால்களை எதிர்கொள்கிறது.
அத்தகைய நேரத்தில், ஜி-20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றுகிறது. நாட்டின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதுடன், அவர்களுக்கு தலைமைப் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் இந்திவர் பாண்டே கூறுகையில், 21ஆம் நூற்றாண்டின் உலகளாவிய வளர்ச்சி தென்னக நாடுகளால் வழிநடத்தப்படும். கிராமம் கிராமமாக பெண்கள் வங்கி மற்றும் நிதி சேவைகளைப் பெற வேண்டும் என்றார்.
ஜி-20 பெண்கள் அதிகாரமளிக்கும் பிரிவின் தலைவர் சங்கீதா ரெட்டி கூறுகையில், டிஜிட்டல் திறன் மூலம் பெண்களை மேம்படுத்த முடியும். இதற்காக, மத்திய அரசு, நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் பிற நிறுவனங்களால் டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.