தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே ராஜபக்ச, ரணில் தரப்பு தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்தகோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தேர்தலை ஒத்திவைத்தால், நாம் வீட்டுக்குள் முடங்கிவிடுவோம் என ரணில் நினைக்கின்றார் போலும்.
அதற்கு இடமில்லை. தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். அதனை நிச்சயம் நாம் பெறுவோம்.
தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே ராஜபக்ச, ரணில் தரப்பு தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது.
சஜித் தரப்பும் அந்த அணியில்தான் உள்ளது. அதனால்தான் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளனர்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.