ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஒரு வீட்டை முற்றுகையிட்டு இஸ்ரேலியப் படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இருப்பினும் கடந்த மாதம் மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலியர்களை கொன்ற துப்பாக்கிதாரியை தாம் அழித்துவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை செவ்வாய்கிழமை மாலை நப்லஸுக்கு தெற்கே உள்ள மற்றொரு அகதிகள் முகாமில் இஸ்ரேலிய படைகளின் மற்றொரு சோதனை நடத்தப்பட்டது.
அஸ்கர் அகதிகள் முகாமில் உள்ள கட்டிடத்திற்குள் நுழைந்த இராணுவம், ஜெனினில் கொல்லப்பட்ட 49 வயதுடைய ஒருவரின் இரண்டு மகன்கள் உட்பட மூன்று பேரை கைது செய்தது.