அண்டார்க்டிகாவில் கடந்த 6 ஆண்டுகளில் 3வது முறையாக கடல் பனி மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட நடப்பாண்டின் பெப்ரவரி மாதத்தில் கடல் மட்டம் கடுமையான வீழ்ச்சியைக் கண்டது எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடல் பனி மிகவும் பிரதிபலிப்பதாலும், வெப்பத்தின் தாக்கம் அங்கு குறைவாக இருப்பதாலும் பனிக்கட்டிகள் உருகுவது கடினம் என, கூறியுள்ள விஞ்ஞானிகள் ஆனால் பனியின் அடியில் ஓடும் நீர் அதனை உருகச் செய்யும் என கூறியுள்ளனர்.
அண்டார்டிகா கண்டம் உருகினால் கடல் மட்டத்தை பல மீட்டர் உயர்த்தும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.