ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது கிராமங்களுக்கு செல்ல முடிகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றி பெரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
‘வரிசை யுகத்தால் எமக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாதிருந்தது.
தற்போது வரிசை யுகம் இல்லை. உரப்பிரச்சினை இல்லை. சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கவுள்ளது.
எனவே, நாடு நெருக்கடியில் இருந்து மீளும். இதனை விரும்பாத சிலரே அரசின் திட்டத்தை சீர்குலைக்க முற்படுகின்றனர்.
தேர்தல் நடந்தால் அதில் நிச்சயம் வெற்றிபெறுவோம்.’ என அவர் தெரிவித்துள்ளார்.