இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரதன்மையையும் பேணுவதற்காகவே அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
அடுத்தவாரம் தான் அறிவிக்கவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிகள் தொடர்பில் தென்கிழக்காசிய மற்றும் பசுபிக் நாடுகளிற்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளில் அவுஸ்ரேலியா இறங்கியுள்ளது.
பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே அணுசக்தி நீர்மூழ்கி திட்டத்தை முன்னெடுப்பதாக அவுஸ்ரேலிய இந்த நாடுகளிற்கு தெரிவிக்கவுள்ளது.
அவுக்கஸ் உடன்படிக்கையின் கீழ் 2030 இல் ஐந்து அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை அவுஸ்ரேலியா அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகவுள்ள இந்த அறிவிப்பை அமெரிக்க, பிரித்தானிய தலைவர்கள் வரவேற்கவுள்ளனர்.