சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரை தடுத்துநிறுத்துவதற்கு பிரித்தானியா பிரான்சுக்கு மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 மில்லியன் பவுண்டுகளை வழங்கும்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோருக்கு இடையில் பரிஸில் நடந்த உச்சிமாநாட்டில் இந்த தொகை அறிவிக்கப்பட்டது. மேலும், பிரான்சும் இதற்கு பங்களிப்பதாக கூறியது.
கூடுதலாக 500 அதிகாரிகள் மற்றும் பிரான்ஸில் ஒரு புதிய தடுப்பு மையத்திற்கு பணம் செல்லும், ஆனால் இது 2026ஆம் ஆண்டு இறுதி வரை முழுமையாக செயல்படாது.
இப்பிரச்சனையைச் சமாளிக்க இந்த ஆண்டு பிரான்சுக்கு சுமார் 63 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க பிரித்தானியா திட்டமிட்டிருந்தது.
2023-24இல் பிரித்தானியா 120 மில்லியன் பவுண்டுகளை உறுதியளித்ததன் மூலம், இந்தப் புதிய தொகுப்பு குறைந்தபட்சம் அந்தத் தொகையை இரட்டிப்பாக்குகிறது.
பிரான்சும் அதன் அமுலாக்கத்திற்கான நிதியை அதிகரிக்கும் என அறிவித்தாலும், அதன தொகை எவ்வளவு என்று கூறவில்லை.