அமெரிக்காவும் தென் கொரியாவும் ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, வட கொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இரண்டு மூலோபாய கப்பல் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.
‘அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் தென் கொரிய கைப்பாவைப் படைகளின் இராணுவ சூழ்ச்சிகள் என்று அழைக்கப்படுவதற்கு மிகப்பெரும் சக்தி வாய்ந்த சக்திகளுடன் பதிலளிப்பதில் வடகொரியாவின் உறுதியை இந்த ஏவுகணை சோதனைகள் காட்டுவதாக’ அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.
வடகொரியா அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சிகளை படையெடுப்பிற்கான ஒத்திகையாகக் கருதுகிறது மற்றும் அதன் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தற்காப்புக்கு அவசியம் என்று வாதிடுகிறது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் இராணுவங்கள் இன்று (திங்கள்கிழமை) அதிகாலையில் தங்கள் ‘சுதந்திரக் கேடயம்’ பயிற்சியைத் தொடங்கின.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வட கொரியாவின் அணு ஆயுத ஒழிப்பைப் பாதுகாப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு ஆதரவாக இடைநிறுத்தப்பட்டதிலிருந்து இதுபோன்ற பெரிய அளவிலான பயிற்சிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.