நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ள அரசாங்கம் ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் (யானை) பொதுஜன பெரமுனவும் (மொட்டு) இணைந்து நாட்டை அழித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.