நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(15) முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், பணிப்பகிஷ்கரிப்பு முழுமையாக செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்று பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகள் உரியவாறு இடம்பெற்றிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.