இந்தியாவுடனான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை விவாதித்து வருவதாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இராம நவமி விழாவையொட்டி மிலிந்த மொரகொட நேற்று (வியாழக்கிழமை) மும்பையில் உள்ள ராஜ்பவனில் மகாராஷ்டிரா ஆளுநர் ரமேஷ் பாயிஸை சந்தித்து பேச்சுவார்தை நடத்திய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இராமாயணம் அல்லது சீதை பாதைகளை தமது நாடு அபிவிருத்தி செய்து வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து இலங்கையில் சூரிய சக்தி மின் நிலையத்தை அமைக்கவுள்ளன