சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான முன்மொழிவுகளைத் தவிர்த்து, அரச சொத்துக்களை விற்பனை செய்வதில் மாத்திரமே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
அரச நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் அதற்கு வலுவான பொறிமுறை அவசியம் என வலியுறுத்திய அவர், சில சுயாதீன அதிகாரிகளுடனும் அவை தொடர்பாக கலந்துரையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் அரசாங்கம் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட, தனியார்மயமாக்கப்பட்ட மற்றும் அரச உடமையின் கீழ் தொடர வேண்டிய அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்தும் கணக்காய்வு அலுவலகத்தினால் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.