நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் சுப்பர் ஓவரில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அக்லாந்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனை அடுத்து பதிலுக்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி, 8 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள போட்டி சமநிலை அடைந்தது.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி 08 ஓட்டங்களை பெற, 3 பந்துகளில் வெற்றி இலக்கை கடந்து இலங்கை அணி வெற்றிபெற்றது.