தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தரம் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையில் புதிதாக மாணவர்களை சேர்ப்பது குறித்து எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.