சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிறுவர்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சை நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.