ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ருத்துராஜ் கெய்க்வாட் 57 ஓட்டங்களையும் டெவோன் கோன்வே 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், மார்க் வுட் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அவிஷ்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, 218 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கெய்ல் மேயர்ஸ் 53 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரான் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், மொயின் அலி 4 விக்கெட்டுகளையும் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் மிட்செல் சான்ட்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 19 ஓட்டங்களையும் 4 விக்கெட்டுகளையும் சாய்த்த மொயின் அலி தெரிவுசெய்யப்பட்டார்.