மதிய உணவு, கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை இன்று (05) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க உணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயுக்களின் விலையை குறைத்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.