ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாசவின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலேயே இதன்போது பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி எதிர்காலத்தில் ஆதரவு வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர, சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பை மிக இரகசியமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தற்போது அது பற்றிய அனைத்து தகவல்களும் வெளியாகியுள்ளதால் இரு தரப்பினரும் கவலையடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சஜித் பிரேமதாசவை தான் சந்திக்கவில்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தனது நண்பரை சந்திக்கச் சென்றதை அடிப்படையாக வைத்து சிலர் இந்த பிரசாரத்தை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.