தெற்கு பிரேஸிலில் உள்ள புளூமெனாவ் நகரில் உள்ள ஒரு மழலையர் பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
நேற்று (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி 09:00 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் போது, நான்கு பேர் காயமடைந்ததாகவும் இதில் குறைந்தபட்சம் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விளையாட்டு மைதானத்தில் மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் நான்கு முதல் ஏழு வயது வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தாக்குதல் நடத்திய 25 வயதுடைய இளைஞர் சரணடைந்ததாகவும், பொலிஸ் காவலில் இருப்பதாகவும் பொலிஸார் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இராணுவப் பொலிஸார் ஒரு அறிக்கையில், தாக்குதல் நடத்தியவர் நகரத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். மொத்தத்தில், தாக்குதலின் போது சுமார் 40 சிறுவர்கள் அங்கு இருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
மாநிலத்தில் மழலையர் பாடசாலை தாக்குதலுக்கு இலக்கானது இது முதல் முறையல்ல. 2021 ஆம் ஆண்டில், 18 வயது இளைஞன், சௌதாட்ஸ் நகராட்சியில் உள்ள ஒரு காப்பகத்தில் இரண்டு ஊழியர்களையும் மூன்று சிறுவர்களையும் கொன்றார்.