அமெரிக்காவும் தென் கொரியாவும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சிகள் மூலம் அணுவாயுதப் போரின் பதற்றத்தை அதிகரிப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவாளர்களின் பொறுப்பற்ற இராணுவ மோதல் வெறி, கொரிய தீபகற்பத்தில் நிலைமையை மீளமுடியாத பேரழிவிற்கு கொண்டு செல்கிறது என சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளரான சோ இட்சுகி ஹியுங் தெரிவித்துள்ளார்.
‘இப்போது கொரிய தீபகற்பத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் அணு ஆயுதப் போரின் கருமேகங்கள் கூடிய விரைவில் அகற்றப்படும் என்று சர்வதேச சமூகம் ஒருமனதாக நம்புகிறது’ என்றும் அவர் மேலும் கூறினார்.
அமெரிக்க மற்றும் தென் கொரியப் படைகள் மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியான வருடாந்திர வசந்தகால பயிற்சிகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.