லெபனானுக்குள்ளும், காஸா பகுதியிலும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுடன் தொடர்புடைய இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தெற்கு லெபனானில் ஹமாஸின் பயங்கரவாத உள்கட்டமைப்பு தாக்கப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படை குறிப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதியை இஸ்ரேலிய பொலிஸார் தொடர்ச்சியாக இரவுகளில் சோதனையிட்டதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
இந்த மசூதி இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான தளமாகும், மேலும் இஸ்ரேலிய தாக்குதல்கள் பாலஸ்தீனியர்களுடன் வன்முறை மோதல்களைத் தூண்டியது மற்றும் பரந்த பிராந்தியத்தில் சீற்றத்தை ஏற்படுத்தியது.
ஏவுகணைகள் ஏவப்பட்டபோது லெபனானில் இருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு முன்னால் பாலஸ்தீனியர்கள் தங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார மாட்டார்கள் என கூறினார்.
இதேவேளை, லெபனானில் இருந்து ஹமாஸ் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்றும் அதன் எல்லையில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு நேரடி தீக்கும் அதுவே பொறுப்பு கூற வேண்டுமெனவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.