பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு ஆறு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கமைய, சித்தி மெரினா மொஹமட், நரசிங்க ஹேரத் முதியன்சேலாகே சித்ரானந்தா, பேராசிரியர் நாகநாதன் செல்வகுமரன், மாணிக்க படத்துருகே ரோஹன புஷ்பகுமார, கலாநிதி அங்கம்பொடி தமிதா நந்தனி டி சொய்சா, ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் பல்லேகம சந்திரரத்ன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.