ஹர்ச டி சில்வா உள்ளடங்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரட்ண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
யார் என்னசொன்னாலும் ஹர்ச டி சில்வா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
ராஜித சேனரட்ண கட்சி தீர்க்கமான முடிவை எடுக்காவிட்டால் தாங்கள் குழுவாக பணியாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலர் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர். ஆனால் தேர்தலில் அவருக்கு எதிராக செயற்பட்டதால் தயக்கம்கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொள்கை வேறுபாடுகள் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து செல்லவில்லை எனவும், மாறாக ரணில் விக்கிரமசிங்கவின் முடிவெடுக்கும் பாணியில் அதிருப்தி காரணமாகவே பிரிந்துசென்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.