பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த வேலைத்திட்டத்திற்காக 7 ஆயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.