வார இறுதியில் கடைகளுக்கு வருகை தரும் நுகர்வோரின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 9.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பிரித்தானிய ரீடெய்ல் கன்சார்டியம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்நிலைமை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே இருப்பதாகவும் எண்ணிக்கையில் சமீபத்திய மீட்சி குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வினால் குடும்பங்களின் நிதிநிலைகள் இன்னும் நசுக்கப்படுகின்றன.
பணவீக்கம், விலைகள் உயரும் வீதம், பெப்ரவரி வரையிலான ஆண்டில் 10.4 சதவீதமாக உயர்ந்தது, இது 40 ஆண்டுகளின் அதிகபட்சத்திற்கு அருகில் உள்ளது.
வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்கள் சவாலான பொருளாதார சூழலை எதிர்கொள்வதால், கடைகளுக்கு வருகை தரும் நுகர்வோரின் எண்ணிக்கையானது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் இருந்து இன்னும் 10.2 சதவீதம் குறைந்துள்ளது என்று பிரித்தானிய ரீடெய்ல் கன்சார்டியம் தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முந்தையதை விட மார்ச் மாதத்தில் மொத்த பிரித்தானிய கால்பதிவு 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆனால் இது முந்தைய மூன்று மாதங்களில் காணப்பட்ட போக்கிலிருந்து ஒரு மந்தநிலையைக் குறிக்கிறது.