கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹட்டன், கொட்டகலை மற்றும் நோர்வூட் பிரதேசங்களில் முட்டைகளை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்துள்ளதாக கூறப்படு கிடைத்துள்ளது.
மேலும் வெள்ளை மற்றும் சிவப்பு முட்டைகளை 56 ரூபாய் முதல் 60 வரையிலான விலைகளில் விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் நுவரெலியா மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மஸ்கெலியா மற்றும் கொட்டகலை நகரங்களில் உணவுப் பொருட்களை விலை காட்டாமல் விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.