பண்டிகைக் காலத்தின் போது அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவதா இல்லையா என்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
முச்சக்கர வண்டிகளுக்கான 5 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை 8 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 4 லீற்றராக 7 லீற்றராகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், கார்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், லொரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றராகவும், வேன்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டாவினை, அதே முறையில் பராமரிப்பதா இல்லையா என்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என எரிசக்தி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.