மா விநியோக மையங்களின் நிர்வாகத்திற்கு பொலிஸாரும் மாவட்ட நிர்வாகமும் முன்னுரிமை அளித்து வருவதால், பஞ்சாப் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.
இதனால் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த வாரம், முல்தானில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்களில், வியாபாரிகள் மற்றும் உள்ளுர்வாசிகள் ஆறு கொள்ளையர்களை அடித்துக் கொலை செய்துள்ளனர்.
மேலும், கொள்ளையர்களின் கைகளில் இரண்டு குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு கும்பல் படுகொலை சம்பவங்களும் முல்தானிலும், மூன்று கர்டெய்சி சந்தையில் மற்றும் மட்டிடல் சாலையில் பல சம்பவங்களும் நடந்தன.
ஒரு நிலைய அதிகாரி, குறிப்பிடுகையில், தினசரி மா விநியோகத்தை நிர்வகிக்க அவர்கள் நாள் முழுவதும் விநியோக தளங்களில் இருக்க வேண்டும்.
இதனால் பொலிஸ் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்கள் கவனிப்பாரற்று கிடப்பதுடன், பொலிஸ் நிலையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால் ரோந்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மா விநியோகத்தை சீராகப் பராமரிக்க கூடுதல் பொலிஸார் வரவழைக்கப்பட வேண்டும், குற்றம் தொடர்பான அழைப்புகளுக்குப் பதிலளிக்க குறைவான அதிகாரிகளே உள்ளனர்.
மா விநியோக தளங்களில் நடந்த கொலைகள் குறித்து மாகாண தகவல் அமைச்சர் அமீர் மிர், மூன்று மதிப்புமிக்க நபர்களின் மரணம் அவசரத்தால் நிகழ்ந்தது என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும், கோதுமை மா விநியோகத்தில் நெரிசலை ஏற்படுத்திய நிர்வாகம் குறித்து பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.