முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு விவசாய பிரதேசத்தில் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு விவசாய பிரதேசத்தில் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
3000 ஏக்கர்களுக்கு மேல் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பிரதேசத்தில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களை படைப்புழு தாக்கியுள்ளது.
படைப்புழுவின் தாக்கத்தினால் வயலில் காணப்பட்ட நெற்பயிர்கள் சிதைந்து அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
ஒரு பயிரில் பல புழுக்கள் அரித்தவண்ணம் இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதனால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கையை முன்னெடுக்கின்ற ஏழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் விவசாயிகள் இந்த படைப்புழுவினை அறக்கொட்டியான் என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர்.
இந்த படைப்புழுவின் தாக்கமானது மேலும் பல பிரதேசங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பரவி வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாடு முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென விவசாயத் திணைக்களத்தினர் பரிந்துரை செய்துள்ளனர்.
குறிப்பாக அனைத்து விவசாயிகளும் ஒரே சமயத்தில் பீடை நாசினிகளை விசுறுவதன் மூலம் இதனை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முடியும் எனவும் இதன் தொடர்பாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாய போதனா ஆசிரியர்களை உடனடியாக தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெரறுமாறும் முல்லைத்தீவு பதில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஜாமினி சசீலன் தெரிவித்துள்ளார்.