டெக்சாஸ் மாகாணத்தின் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வழிப்போக்கர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதன்போது நூற்றுக்கணக்கானோர் வணிக வளாகத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சிலர் குழந்தைகள் என்றும் குறைந்தது 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேநேரம் அவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள பொலிஸார், இந்த சம்பவத்தின் பின்னணியில் எவ்வித பயங்கரவாத நடவடிக்கையும் இல்லை ஏற்பதை உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் குறைந்தது 198 துப்பாக்கி சூட்டு வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.