இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 7,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் கோலி 55 ஓட்டங்களை பெங்களூர் அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 7,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த வரிசையில் 6,536 ஓட்டங்களுடன் ஷிகர் தவான் இரண்டாம் இடத்திலும், 6,189 ஓட்டங்களுடன் டேவிட் வோர்னர் மூன்றாவது இடத்திலும், 6,063 ஓட்டங்களுடன் ரோஹித் சர்மா நான்காவது இடத்திலும் உள்ளனர்.