எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி பங்கேற்கும் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள புதிய மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.