தனக்கு சந்தர்ப்பம் வழங்கும் பட்சத்தில் நாட்டில் டெங்கு நோய் பரவலை ஒரு வாரத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாம் ஆட்சிக்கு வந்தால் டெங்கு ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிகளுடனும் சுகாதார அமைச்சுடனும் பேச்சுவார்த்தை நடத்துவன் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போது அரசியல்வாதிகள் இந்த திட்டத்தில் ஈடுபடவில்லை, என்றும் தற்போதைய சுகாதார அமைச்சர் எனது நண்பர், அவருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.என்றும் அவர் கூறினார்.
அத்துடன் அமைச்சர் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு தேவையான பொருட்களை வழங்க வேண்டும். நான் ஆட்சியில் இருந்தபோது அதைச் செய்தேன், ஒரு நபர் மட்டுமே எதிர்த்தார். இப்போது டெங்கு ஒரு தொற்றுநோயாக மாறுகிறது.
மேலும் அரசாங்கம் உடனடியாகக் கண் திறந்து செயற்பட வேண்டும்.பதவிகள், சம்பளம், வாகனங்கள் எதுவும் வழங்காமல் எனக்கு வாய்ப்பை வழங்குங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மக்களின் ஆதரவுடன் டெங்கு பரவுவதை ஒரு வாரத்திற்குள் தடுத்து நிறுத்துவேன் எனவும் குறிப்பிட்டார்.