உளவு பார்த்த குற்றச்சாட்டில் 78 வயதான அமெரிக்க பிரஜை ஒருவருக்கு சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஹொங்கொங்கில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற ஜான் ஷிங்-வான் லியுங் என்பவருக்கே இன்று திங்கட்கிழமை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட குறித்த நபர் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
தாய்வான், தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவமயமாக்கல் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இரு நாடுகளும் தொடர்ந்தும் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.