சென்னை பெருநகரில் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹிட் வரையில் அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், பகல்நேர வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பால் வெப்ப அழுத்தம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.