திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட சுகாதார பணியாகம் மற்றும் பிரதேச சபைகளூடாக நகர் பகுதியில் துப்புரவாக்கும் பணிகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி திருகோணமலை நகர சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைகளுக்கு உற்பட்ட நகர் பகுதிகளில் பொதுசுகாதார பரிசோதகர்கள், முப்படையினர், பொதுமக்கள் இணைந்து இந்த சிரமதானப் பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக திருகோணமலை கொழும்பு பிரதான வீதியில் கடற்கரையோரங்களில் காணப்படுகின்ற திண்மக் களிவு அகற்றும் நடவடிக்கையும் வரோதய நகர் பகுதியில் வீதியோரங்களில் காணப்படுகின்ற கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளும் , தண்ணீர் தேங்கும் பொருட்களையும் அகற்றும் நடவடிக்கைகளும் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
மேலும் வீடுகளில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக வீட்டையும் வீட்டுச்சுற்றுச் சூழல்களையும் பாதுகாப்பான முறையில் நுளம்புகள் பெருகாதவாறு தூய்மைப்படுத்தி டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமெனவும் இதன் போது அறிவிக்கப்பட்டுள்ளது.