மத்தியவங்கி வெளியிட்ட வெளிநாட்டு நாணய மாற்றத்தின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள் விலை 302.42 ரூபாயாகவும் விற்பனை விலை 316.18 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தோடு புதிய நிதி கொள்கைகள் தொடங்கப்பட்டதால், கடந்த சில வாரங்களில் டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.
இதேநேரம் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை டொலருக்கு நிகரான ரூபாய் பெறுமதி மேலும் வலுவடையும் என்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.