கர்நாடகா முதல்வராக சித்தாராமையாவும் துணை முதல்வராக சிவக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் சனிக்கிழமை குறித்த இருவரும் பதவியேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பதவியேற்பு விழா பெங்களூரில் இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு பெரிதும் சர்ச்சை நிலவி வந்த நிலையில் குறித்த இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது,