பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தத் தவறியவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் சீ. இந்திரகுமார் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.