யாழ் மாவட்டத்தில் நிலவும் விளையாட்டுத்துறைசார் தேவைகளைத் தீர்த்து வைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில், தற்போது யாழ் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் இளைஞர் யுவதிகள் தொடர்பாக எடுத்துரைத்த அங்கஜன் இராமநாதன், அவர்களுக்கான பயிற்சி வசதிகள், வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க விளையாட்டுத்துறை அமைச்சு கவனமெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.