நாட்டில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 883 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்களின் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பதிக்குள் 25 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கால்நடைகளிடையே பரவி வரும் தோல் கழலை நோய், மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பரவியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மேல் மாகாணத்திலுள்ள கால்நடைகளிடையே தோல் கழலை நோய் தொடர்ந்தும் பரவி வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல கூறியுள்ளார்.